உலக செய்திகள்

ரஷ்யாவில் கொரோனா வைரசின் கோரத்தாண்டவம்: 11வது நாளாக 10 ஆயிரத்தை கடந்த பாதிப்புகள்

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11வது நாளாக 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

தினத்தந்தி

மாஸ்கோ,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 43,64,089 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 2,93,580 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டில் ஆரம்ப காலகட்டத்தில் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நிலையில், தற்போது அங்கு கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் 10,028 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 11வது நாளாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2,42,271 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இதுவரை அங்கு 2,212 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு கொரோனா தொற்றில் இருந்து 48,003 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளை பின்னுக்குத்தள்ளி ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் ஸ்பெயினும் உள்ளன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து