கோப்புப்படம் 
உலக செய்திகள்

இங்கிலாந்தை அச்சுறுத்தும் கொரோனா: புதிதாக 1,42,224 பேருக்கு தொற்று...!

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,42,224 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

லண்டன்,

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரேநாளில் புதிதாக 1,42,224 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,46,17,314 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 77 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 230 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 77,613 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம் இதுவரை குனமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 08 லட்சத்து 58 ஆயிரத்து 512 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புடன் 36,08,572 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்