உலக செய்திகள்

போலீஸ் வேன், சிறைத்துறை பஸ் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 16 பேர் பலி

தெற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நமீபியா

தினத்தந்தி

விண்ட்ஹொக்,

தெற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நமீபியா. இந்நாட்டின் ஹர்டெப் மாகாணம் மெரிண்டெல் நகரில் நேற்று முன் தினம் மாலை சிறைத்துறை பஸ்சில் போலீசார், கைதிகள் உள்பட 13 பேர் பயணித்தனர். அந்த பஸ் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, போலீசார் 6 பேருடன் வந்தகொண்டிருந்த போலீஸ் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சிறைத்துறை பஸ் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் 14 போலீசார் உள்பட 16 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து