உலக செய்திகள்

"புதிய வழிமுறைகளால் நெருக்கடியை கையாளலாம்" - கோத்தபய ராஜபக்சே நம்பிக்கை

புதிய வழிமுறைகளால் நெருக்கடியை கையாளலாம் என்று கோத்தபய ராஜபக்சே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

கொழும்பு,

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி, கடந்த மாதம் 9-ந் தேதியில் இருந்து தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பு கோட்டையில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற தொழிற்சங்க பிரதிநிதிகளுடான சந்திப்பு நடைபெற்றது.

அப்போது அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியதாவது:-

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புதிய வழிமுறைகளை கையாண்டு அரசியல் பிளவுகளில் இருந்து விலகி செல்ல வேண்டியது அவசியம். புதிய வழிமுறைகளால் நெருக்கடியை கையாளலாம் என அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறினர். வேலை நிறுத்தங்களால் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுவத்துவதே இதன் பின்னனியில் உள்ள அரசியல் நோக்கம் என கூறினார்.

மேலும் 6-ந் தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்தத்திற்கு எவ்வித ஒத்துழைப்பு இல்லை என தொழிற்சங்கங்கள் அறிவித்ததாக கூறப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து