நியூயார்க்,
கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் பல கோடி மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் (Georgina Rodriguez), அவருக்கு இந்த கிறிஸ்துமஸுக்கு ரூ. 7 கோடி மதிப்புள்ள வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce Dawn) கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.
அதனைப் பார்த்த ரொனால்டோ வாயடைத்து நின்ற வீடியோ இணையத்தை வைரலாகி வருகிறது. ரொனால்டோ தனது புதிய வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் இன் படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
மேலும், ரொனால்டோ தனது புதிய காரை பார்த்து ஆச்சரியத்தில் மலைத்துப்போய் நின்ற முழு காட்சியையும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது ரொனால்டோவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் அல்ல. ரொனால்டோ ஒரு பாரிய கார் பிரியர், மேலும் அவர் தனது கேரேஜில் பல சுவாரஸ்யமான கார்களை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram