ரோபோவை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் சில சிக்கல்கள் இருந்தன. இதனால் ரோபோவுக்கு பதிலாக பறவைகளுக்குப் பயிற்சி அளித்து, பயன்படுத்த முடிவெடுத்தனர். நீண்டகாலமாக புறாக்களை மனிதர்கள் பயன்படுத்தி வந்ததால், அவற்றைத் தேர்ந்தெடுத்தனர்.
ஆனால் புறாக்களுக்கு பயிற்சி அளிக்கும்போதுதான் அது எவ்வளவு கடினமான விஷயம் என்பது அவர்களுக்கு புரிந்தது. காகங்களுக்குப் பயிற்சியளிக்க முடிவெடுத்தனர். அவைகள் சிகரெட் துண்டுகளை அப்புறப்படுத்துவதற்கு நூதன முறையை கையாண்டார்கள். அது காகங்களுக்கு தீனி போடும் விதத்தில் அமைந்திருந்ததால் அவர்கள் எதிர்பார்த்த பலன் கிடைத்திருக்கிறது.