உலக செய்திகள்

மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து கியூபாவில் உணவு, மருந்துகள் மீதான சுங்க வரி ரத்து

கியூபா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு மத்தியில் உணவுப்பொருட்களுக்கும், மருந்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. விலைவாசிகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

தினத்தந்தி

உணவுப்பொருட்களுக்கும், மருந்துப் பொருட்களுக்குமான சுங்க வரிகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக அமைந்தது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வீதிகளில் இறங்கி போராட்டங்கள் நடத்தினர். அங்கீகாரமற்ற போராட்டங்கள், அரசு எதிர்ப்பு போராட்டங்கள் அங்கு சட்டவிரோதம் ஆகும். எனவே இந்த போராட்டங்களால் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், உணவுப்பொருட்கள், மருந்துப்பொருட்கள் மீதான சுங்க வரிகளை தற்காலிகமாக ரத்து செய்து கியூபா அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் கியூபா செல்கிற பயணிகள் இந்த ஆண்டு இறுதிவரையில் வரம்பின்றி உணவு, மருந்து பொருட்களை எடுத்துச்செல்ல முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?