ஹவானா
ஜோஸ்ஃபினா விதால் எனும் அந்தப் பெண் அதிகாரி தற்போது கனடாவின் தூதராக நியமிக்கப்பட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான விதால் அமெரிக்காவும், கியூபாவும் நெருங்கி வந்து தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றினார்.
முன்னாள் அதிபர் ஒபாமாவும், கியூபாவின் அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் இரு அண்டை நாடுகளுக்கிடையிலான உறவுகள் சகஜமாக 22 ஒப்பந்தங்களை செய்து கொண்டனர். சுமார் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக இரு நாடுகளுக்குள் கடும் பகை நிலவி வந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டில்தான் மீண்டும் சகஜ நிலை திரும்ப வந்தது.
புதிய அமெரிக்க அதிபர் டிரம்ப் கியூபாவுடனான உறவுகள் தவறானவை என்று கூறியதோடு கியூபாவின் ராணுவத்துடன் தொடர்புள்ள அந்நாட்டு நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்வதையும் தடுக்கப் போவதாக கூறினார்.
விதாலுடன் கியூபாவில் பணியாற்றிய அமெரிக்க உயரதிகாரியான ஜெஃப்ரி டிலாரெண்டிஸ் இம்மாத துவக்கத்தில் தனது பதவியை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் பதவிக்கு வந்தப் பிறகு இரு நாடுகளுக்கு இடையில் தூதரக ரீதியில் அதிகம் தொடர்ப்பு இல்லாமல் இருக்கிறது. இரு நாட்டு உறவை மேம்படுத்த உதவிய அதிகாரிகளுக்கு பதிலாக யார் பதவியேற்க உள்ளனர் என்பது இன்னும் தெரியவில்லை.