உலக செய்திகள்

இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு ஆதரவு - அமெரிக்கா

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தையை நாங்கள் ஆதரிக்கிறோம் என்கிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர்.

தினத்தந்தி

அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் வாஷிங்டனில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவிவரும் பிரச்சினையில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மேத்யூ மில்லர், "நாங்கள் நீண்ட காலமாக கூறியது போல், கவலைக்குரிய விஷயங்களில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தையை நாங்கள் ஆதரிக்கிறோம். அதுவே நீண்டகாலமாக எங்களின் நிலைப்பாடு" என்றார்.

அனைத்து தீவிரமான மற்றும் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தெரிவித்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை