உலக செய்திகள்

லிபியாவில் அகதிகள் முகாம் மீது தாக்குதல்: 40 பேர் பலி

லிபியாவில் அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

திரிபோலி,

லிபியா தலைநகர் திரிபோலியின் புறநகர் பகுதியான தஜூரா என்ற இடத்தில் அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் ஆப்பிரிக்க நாடுகளான சோமாலியா, சூடான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அகதிகளாக உள்ளனர். இந்த நிலையில், இந்த முகாம் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு, லிபியாவில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து வரும் ஜெனரல் கலிஃபா ஹப்டர் தான் காரணம் என்று அந்நாட்டு அதிகாரிகள் குற்றம் சாட்டினர். லிபியாவை கைப்பற்ற போகிறோம் என்ற கோஷத்தோடு கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இது போன்ற தாக்குதல்களில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது