உலக செய்திகள்

செனகலில் எதிர்க்கட்சித் தலைவர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: 5 பேர் பலி

செனகல் நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின் போது 5 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

தக்கார்,

மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் எதிர்க்கட்சித் தலைவர் உஸ்மானே சோன்கோவை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் தக்கார் உள்பட நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டத்தில் நேற்று முன்தினம் மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் 5 பேர் பலியாகினர்.

முன்னதாக தெற்கு செனகலில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்டதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன்மூகம் செனகல் போராட்டங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தது.

ஒரு கற்பழிப்பு குற்றச்சாட்டின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் உஸ்மானே சோன்கோ கடந்த புதன்கிழமை அன்று கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டங்கள் அங்கு நடைபெற்று வருகின்றன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து