உலக செய்திகள்

கோவேக்சின் தடுப்பூசி விவகாரத்தில் இன்னும் 4-6 வாரங்களில் முடிவு- உலக சுகாதார அமைப்பு

கோவேச்கின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து 4-6 வாரங்களில் முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

ஜெனீவா,

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அண்மையில், கோவேக்சின் தடுப்பூசி நிறுவனம் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகளையும் செயல் திறன் பற்றிய தரவுகளையும் வெளியிட்டது.

இந்த நிலையில், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஏற்பாடு செய்திருந்த இணைய கருத்தரங்கு ஒன்றில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், அடுத்த 4- 6 வாரங்களில் கோவேச்கின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்த முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்றார்.

மேலும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் மொத்த தரவுகளும் உலக சுகாதார அமைப்புக்கு கிடைத்து வருவதாகவும் நிபுணர் குழுவால் இது ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை