உலக செய்திகள்

கொரோனா சிவப்பு பட்டியலில் இருந்து 7 நாடுகளின் பெயரை நீக்க முடிவு - இங்கிலாந்து அரசு அறிவிப்பு

கொரோனா சிவப்பு பட்டியலில் இருக்கும் 7 நாடுகளின் பெயரையும் பட்டியலில் இருந்து நீக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.

லண்டன்,

கொரோனா பரவல் அச்சத்தால் கொலம்பியா, டோமினிக்கன் குடியரசு, ஈகுவேடார், ஹைதி, பனாமா, பெரு, வெனிசுலா உள்ளிட்ட 7 நாடுகளையும் இங்கிலாந்து அரசு சிவப்பு பட்டியலில் வைத்திருந்தது. அந்த நாடுகளுக்கு பயணம் செய்யவும், தொழில் மற்றும் வர்த்தக ரீதியான செயல்பாடுகளை மேற்கொள்ளவும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகளுக்காக அந்த நாடுகளின் பெயர்களை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் சிவப்பு பட்டியலில் இருக்கும் 7 நாடுகளின் பெயர்களும் நீக்கப்படும் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்