கோப்புப்படம்  
உலக செய்திகள்

அமெரிக்க ராணுவ மந்திரிக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்க ராணுவ மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் அதிகமாக பரவி வருகிறது. அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த மாதம் 10 நாட்கள் இடைவெளியில் 2 முறை கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளானார். இந்த நிலையில் அமெரிக்காவின் ராணுவ மந்திரியான லாயிட் ஆஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

69 வயதான லாயிட் ஆஸ்டின் தனக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், அடுத்த 5 நாட்கள் வீட்டில் இருந்து பணியாற்ற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆஸ்டின் 2-வது முறையாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். இதற்கு முன் கடந்த ஜனவரி மாதம் அவருக்கு தொற்று உறுதியானது. ஆஸ்டின் பூஸ்டர் உள்பட கொரோனா தடுப்பூசியின் 3 டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...