உலக செய்திகள்

சீனாவின் மிரட்டலை மீறி தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா

சீனாவின் மிரட்டலை மீறி அமெரிக்கா 2.4 பில்லியன் டாலர் கடலோர பாதுகாப்பு அமைப்புகளை தைவானுக்கு விற்பனை செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

வாஷிங்டன்

கடந்த சில மாதங்களாக தைவானுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. எந்த நேரத்திலும் சீனா தைவான் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தைவானுக்கு வான்வழி-தரைவழி கப்பல் ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுத அமைப்புகள் ஆகியவைகளை விற்க அமெரிக்க நிறுவனங்கள் ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இந்த "ஆயுத விற்பனையை நிறுத்த" அமெரிக்காவை வலியுறுத்தினார்.

தைவானுக்கு அமெரிக்க ஆயுத விற்பனையின் சமீபத்திய செயலுக்கு பதிலளிக்கும் விதமாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், ஆயுத விற்பனையில் பங்கேற்கும் அமெரிக்க நிறுவனங்கள் மீது சீனா பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என்று கூறியுள்ளார்.

தைவான் சீனாவின் ஒரு பகுதி என்றும், தைவான் சீனாசுதந்திரத்தை அறிவிப்பதை நோக்கி தக்க பத்லடி கிடைக்கும் என சீனா எச்சரித்து உள்ளது.

2.37 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு ஒப்பந்தத்தில் 100 போயிங் தயாரிக்கப்பட்ட கடலோர பாதுகாப்பு அமைப்புகளை தைவானுக்கு விற்க அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் என கூறிய கூறிய சில மணி நேரங்களிலேயே இந்த அறிவிப்பு வந்து உள்ளது.

தைவானின் ஜனாதிபதி சாய் இங்-வென் அலுவலகம் விற்பனைக்கு அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில் இது "சமச்சீரற்ற போர் திறன்களை மேம்படுத்தும்" என்று கூறியது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு