கோப்புப்படம் 
உலக செய்திகள்

‘இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளிகள்’ - சீன வெளியுறவு மந்திரி

இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல என்றும், கூட்டாளிகள் என்றும் சீன வெளியுறவு மந்திரி வாங் யி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பீஜிங்,

சீன வெளியுறவு மந்திரி வாங் யி, திடீர் பயணமாக கடந்த 25-ந் தேதி இந்தியா வந்தார். தலைநகர் டெல்லியில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவால் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் சீன தலைநகர் பீஜிங்கில் பத்திரிகையாளர்களை சந்தித்த வாங் யி, தனது இந்திய பயணம் குறித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இருதரப்பு உறவுகளின் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பது, இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று அச்சுறுத்தலாக இல்லை என்பதை உறுதி செய்வது மற்றும் நடைமுறை சிக்கல்களை சரியாக தீர்ப்பது, கையாள்வது போன்றவற்றில் ஒருமித்த கருத்தை கடைபிடிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளிகள். ஒருவரையொருவர் குறைத்துக்கொள்வதற்குப் பதிலாக, ஒருவருக்கொருவர் வெற்றிபெற உதவ வேண்டும் என்று வாங் யி கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்