உலக செய்திகள்

வரவிருக்கும் மாதங்களில் டெல்டா வகை கொரோனா ஆதிக்கம் செலுத்தும் - உலக சுகாதார அமைப்பு

96 நாடுகளில் டெல்டா வகை கொரோனா; வரவிருக்கும் மாதங்களில் ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினத்தந்தி

ஜெனீவா

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.29 -கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 16.75- கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 39.62- லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமா 11,455,327பேர் தொடாந்து சிகிச்சை பெற்று வருகின்றனா.

தற்போது உலகம் முழுவதும் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவிவருகிறது. டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாடு இப்போது 96 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது, கடந்த வாரத்தை விட தற்போது 11 நாடுகள் அதிகம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜூன் 29, 2021 நிலவரப்படி, உலக சுகாதார அமைப்பு தனது கொரோனா வாராந்திர தொற்றுநோயியல் அறிக்கையில் 96 நாடுகள் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தெரிவித்து உள்ளன. இருப்பினும் இது மாறுபாடுகளை அடையாளம் காணத் தேவையான வரிசைமுறைத் திறன்கள் குறைவாக இருப்பதால் இது குறைத்து மதிப்பிடப்படுகிறது.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஆல்பா மாறுபாட்டின் பாதிப்புகள் 172 நாடுகளிலும் 120 நாடுகளில் பீட்டா வகை பாதிப்பும் 72 நாடுகளில் காமா வகை பாதிப்பும் மற்றும் 96 நாடுகளில் டெல்டா (11 புதிய நாடுகள்) வகை பாதிப்புகளும் உள்ளதாக தெரிவித்து உள்ளது.

வரவிருக்கும் மாதங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்