ஜெருசலேம்,
இஸ்ரேல் நாட்டினர் மற்றும் பாலஸ்தீனியர்கள் சொந்தம் கொண்டாடி வரும் ஜெருசலேம் நகர் நீண்டகால சர்ச்சையில் உள்ளது. இந்த நகரில் கிறிஸ்து பிறப்புக்கு முன் அரசர்கள் பலர் ஆட்சி செய்து வந்தனர். அவர்கள் பல அந்நிய படையெடுப்புகளை எதிர்கொண்டனர். இந்நிலையில், கி.மு. 701ம் நூற்றாண்டில் அசிரியர்களின் படையெடுப்பு முறியடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கி.மு. 586ம் நூற்றாண்டில் பாபிலோன் நகரம் அழிக்கப்பட்டது. இந்நகரம் வரலாற்று சிறப்பு பெற்ற தொங்கும் தோட்டம் கொண்டிருந்தது. இந்த நிலையில், ஜெருசலேமில் அரண்மனை ஒன்றை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
இந்த அரண்மனை கி.மு. 701 மற்றும் 586 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த கால கட்டத்தில் 8 அரசர்கள் அடுத்தடுத்து அரசாட்சி செய்துள்ளனர். அவர்களில் 5 பேர் கிறிஸ்துவின் முன்னோர்கள் என பைபிளில் குறிப்பிடப்பட்டு உள்ளனர்.
இந்த பழங்கால அரசர்களுக்கும், தொல்லியல் துறை ஆய்வில் கண்டறியப்பட்ட அரண்மனையில் இருந்து கிடைத்த கலை பொருட்களுக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமை காணப்படுகிறது. அரண்மனையின் கல் வேலைப்பாடுகள் நவீன இஸ்ரேலின் நாணயத்தில் இடம் பெற்று உள்ளன.
கி.மு. 586ம் நூற்றாண்டில் அரண்மனை அழிக்கப்பட்டிருக்க கூடும் என கூறப்படுகிறது. எனினும், அதில் உள்ள சில கலை பொருட்கள் ஆய்வில் கிடைத்துள்ளன. இந்த அரண்மனையில் இருந்து கிடைத்த கலை பொருட்கள் வரும் நாட்களில் ஜெருசலேமில் காட்சிக்கு வைக்கப்படும்.