வாஷிங்டன்,
பெரும் சர்ச்சையை இது ஏற்படுத்தியதை தொடர்ந்து எட்வர்ட் மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் கடற்படையின் நிலைப்பாட்டின் மீது ஜனாதிபதி டிரம்புக்கு கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
இந்த நிலையில், எட்வர்ட் மீதான போர்குற்ற விசாரணையை கடற்படை தலைவரான ரிச்சர்ட் ஸ்பென்சர் சரியாக கையாளவில்லை என கூறி அவரை ராணுவ மந்திரி மார்க் எஸ்பர் பதவியில் இருந்து நீக்கினார்.
இது குறித்து பென்டகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் எட்வர்ட் விவகாரத்தில் கடற்படை தலைவர் ரிச்சர்ட் ஸ்பென்சர் வெள்ளை மாளிகைக்கு தவறான தகவல்களை வழங்கி வந்ததால், அவர் மீதான நம்பிக்கை குறைந்ததை அடுத்து, ராணுவ மந்திரி அவரை பதவியில் இருந்து நீக்கினார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.