உலக செய்திகள்

"மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம்" - இலங்கையில் மருத்துவர்கள் போராட்டம்

இலங்கையில் உயிர்காக்கும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

கொழும்பு,

இலங்கையில் உயிர்காக்கும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதனை கண்டித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டம் நடத்தினர்.

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மருந்து பொருட்களுக்கும், மயக்க மருந்துகளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்யக்கோரி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அப்போது மருத்துவம் மக்களின் அடிப்படை உரிமை, இலங்கை மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம் ஆகிய பதாகைகளை ஏந்தி அவர்கள் போராட்டம் நடத்தினர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்