உலக செய்திகள்

எந்த ஒரு விலை கொடுத்தும் சீனாவின் இறையாண்மையை காப்போம் -மக்கள் விடுதலை இராணுவம்

டோக்லாம் பகுதியில் அவசர நடவடிக்கை மேற்கொண்டதாகவும், மேலும் இப்பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருவதாகவும் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் தெரிவித்து உள்ளது.

பீஜீங்

சிக்கிம் செக்டார் டோக்லாம் பகுதியில் சாலை கட்டமைப்பு பணிகளை சீனா அடாவடியாக முன்னெடுக்கிறது. அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக இந்தியா மற்றும் பூடான் எல்லைக்குள் அடாவடியாக நுழைந்து ஒரு பதட்டமான நிலையை ஏற்படுத்தி உள்ளது.

பூடான் எல்லைக்குள் நாங்கள் நுழையவில்லை என மறுப்பு தெரிவிக்கும் சீனா, இந்தியா மட்டும் தன்னுடைய ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இது குறித்து சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் கூறும் போது சீனாவின் இறையாண்மையை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுப்போம். இந்த பகுதியில் இந்தியா தனது ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும். இந்த பகுதியில் அவசரநிலை நடவடிக்கை மேற்கெண்டதுடன், இப்பகுதியில் இன்னும் கூடுதலான நடவடிக்கைகளை மேற்கெள்ளபட்டு உள்ளது. சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் ஆகஸ்ட் 1 ந்தேதி தனது 90 வது ஆண்டை நிறைவு செய்கிறது. இதற்கான சிறப்பு மாநாட்டில் இந்த் செய்தியை வெளியிட்டு உள்ளது.

கடந்த 90 ஆண்டுகளில் மக்கள் விடுதலை இராணுவம் தனது வரலாற்றில் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை நிரூபித்துள்ளது. இந்து ராணுவத்தின் திறமையும், தீர்க்கமுடியாத தன்மையும் ஆகும்" என தேசிய பாதுகாப்பு அமைச்சின் செய்தித்தெடர்பாளர் மூத்த கர்னல் வு கியான் தெரிவித்துள்ளார்.