உலக செய்திகள்

உலக வர்த்தக அமைப்பின் விதிகள் நியாயமற்றது -அமெரிக்கா குற்றச்சாட்டு

உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூ.டி.ஓ) விதிகளை நியாயமற்றது என்றும் சீனா 30 ஆண்டுகளாக அமெரிக்காவிற்கு எதிராகப் இதனை பயன்படுத்தியதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

வாஷிங்டன்

வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-

உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூ.டி.ஓ) விதிகளை நியாயமற்றது என்றும் சீனா 30 ஆண்டுகளாக அமெரிக்காவிற்கு எதிராகப் இதனை பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.

சீனா நம்பமுடியாத அளவிற்கு எங்களையும் பிற நாடுகளையும் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது. உதாரணமாக, அவர்கள் வளரும் தேசமாக கருதப்படுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.

"அவர்கள் வளரும் நாடு என்பதால் சீனாவுக்கு பெரிய நன்மைகள் கிடைக்கின்றன. இந்தியா, வளரும் நாடு. அமெரிக்கா பெரிய வளர்ந்த நாடு. சரி, எங்களுக்கு ஏராளமான வளர்ச்சி உள்ளது.

வளரும் தேசமாக இருப்பதால் அவர்களுக்கு பல நன்மைகள் வழங்கப்பட்டன. உலக வர்த்தக அமைப்பால் அமெரிக்காவும் சாதகமாக பயன்படுத்தப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அமெரிக்காவின் உதவியுடன் உலக வர்த்தக அமைப்பில் இணைந்த பின்னர் சீனப் பொருளாதாரம் வளர்ச்சியடையத் தொடங்கியது.

உலக வர்த்தக அமைப்பில் சேர சீனா அனுமதிக்கப்பட்டபோது, அது அமெரிக்காவிற்கு மிகவும் மோசமான நாளாக இருந்தது, என்று அவர் கூறினார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்