அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர வருகிற 20 ந்தேதி பதவி ஏற்க உள்ளார்.
அமெரிக்கா ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்ப் ஆரம்பம் முதலே சர்ச்சையில் சிக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது விபச்சார அழகிகளுடான தொடர்பு குறித்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
புஷ்பீடி என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 2013 ஆண்டு ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கேவில் உள்ள புகழ்பெற்ற ஓட்டலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தன் மனைவியுடன் வந்து தங்கினார்.
ஒபாமாவை எப்போதும் வெறுக்கும் டொனால்டு டிரம்ப் ஒரு கீழ்தரமான செயலில் அப்போது ஈடுப்பட்டுள்ளார். அதாவது, விபச்சார அழகிகளை அழைத்து வந்து ஒபாமா தங்கியிருந்த அறையில் சிறுநீர் கழிக்க வைத்தார் என கூறப்பட்டுள்ளது.
மேலும் ரஷ்யா புலனாய்வு துறையினரிடம் இன்னும் பல உண்மைகள் ஆதாரத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதை மறுத்து டொனால்டு டிரம்ப் டுவிட் செய்து உள்ளார்.
FAKE NEWS - A TOTAL POLITICAL WITCH HUNT!
Donald J. Trump (@realDonaldTrump) 11 January 2017