உலக செய்திகள்

துப்பாக்கிக் கலாச்சாரம் வேண்டாம்: அமெரிக்காவில் போராட்டத்தில் குதித்த பள்ளி மாணவர்கள்

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினத்தந்தி

மிச்சிகன் ,

அமெரிக்காவின் விர்ஜினியா மற்றும் மிச்சிகன் மாகாணங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குழந்தைகளுக்கு ஆதரவாக வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

டெக்சாஸ் மாகாணத்தில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் பலியான நிலையில், உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டியும், துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டங்களைக் கடுமையாக்கக் கோரியும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

அந்த வகையில் மிச்சிகன் மற்றும் விர்ஜினியா மாகாணங்களிலும் பள்ளி மாணவர்கள் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு எதிராகக் களம் இறங்கினர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை