மாஸ்கோ,
ரஷியாவின் தென் மேற்கு பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலை மீது இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஆலை முழுவதும் தீப்பிடித்து எாந்து நாசமானது.
இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினா அரைமணி நேரமாக போராடி தீயை அணைத்தனா. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தீயணைப்பு துறை அதிகாகள் தொவித்தனா.
2 ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இது ஒரு பயங்கரவாத செயல் என ஆலை நிர்வாகம் தொவித்து உள்ளது. 2 உக்ரேனிய ட்ரோன்கள் ஆலையில் மேலே பறந்ததாகவும், அவை ஆலையின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக உள்ளு செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.
இந்த தாக்குதலுக்கு உக்ரேன் இதுவரை பொறுப்பேற்கவில்லை.