உலக செய்திகள்

போதை மாத்திரையில் ‘டிரம்ப்’-ன் முகம்: போலீசார் பறிமுதல்

அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முக வடிவிலான எக்ஸ்டசி வகை போதை மாத்திரைகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

பெரு,

அமெரிக்காவின், இண்டியானா மாகாணத்தில் சில போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் படத்தை தங்கள் சட்டவிரோதப் பொருள்களில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், நுகர்வோரை ஊக்குவிக்கும் வகையில், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் சில நேரங்களில் தனிப்பட்ட வடிவத்தில் அல்லது குறிப்பிட்ட நிறமுள்ள மருந்துகளை மார்க்கெட்டிங் நுட்பமாக செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இண்டியானா மாகாண போலீசார் போதை பொருள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முக வடிவிலான எக்ஸ்டசி வகை போதை மாத்திரைகளை கைப்பற்றினர்.

போலீசாரின் இந்த சோதனையில், 129 போதை பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள், அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப்-ன் ஆரஞ்சு நிற முக வடிவில் இருந்ததாகவும், அதில் மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன் என்று எழுதப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பறிமுதல் நடவடிக்கையில் மத்திய இந்தியானா பகுதியை சேர்ந்த ஷெரிப் துறையினர் மற்றும் மாநில போலீசார் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கொகைய்ன், ஹெரோயின் மற்றும் பெயர் கண்டறிய முடியாத பல மருந்துகளை போலீசார் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்