உலக செய்திகள்

அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் புழுதிப்புயல் - நெடுஞ்சாலையில் 70-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி விபத்து

நெடுஞ்சாலை விபத்துக்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 37 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில் கடுமையான புழுதிப்புயல் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சாங்கமன், மாண்ட்கோமெரி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புழுதிப்புயல் சூழ்ந்தது.

இதனால் நெடுஞ்சாலைகளில் சுமார் 70-க்கும் மேற்பட்ட கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்றாக மோதி விபத்திற்குள்ளாகின. இந்த விபத்துக்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 37 பேர் படுகாயமடைந்து மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் தேசிய வானியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, காற்றின் வேகம் மணிக்கு சுமார் 35 முதல் 45 கி.மீ. வரை இருக்கக் கூடும் என்றும், நெடுஞ்சாலைகளில் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு