உலக செய்திகள்

பாராளுமன்றத்தில் தரையில் தான் சிந்திய காபியை சுத்தம் செய்த நெதர்லாந்து பிரதமர்!

பாராளுமன்றத்தில் தரையில் தான் சிந்திய காபியை நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே சுத்தம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #PMMarkRutte

தினத்தந்தி

ஆம்ஸ்டர்டம்,

டச்சு பாராளுமன்றத்தில் பிரதமர் மார்க் ரூடே காபியை எடுத்துச் செல்கிறார். எதிர்பாராத விதமாக தரையில் கொட்டிவிடுகிறார். காபி கொட்டியதும் அதிர்ச்சியாக பார்க்கும் அவர், அங்கிருந்த பணியாளரிடம் துடைப்பானை வாங்கினார். துடைப்பானை கொண்டு தரையை அசுத்தப்படுத்திய காபியை சுத்தம் செய்தார். அவருடைய பணியை பார்த்து அங்கிருக்கும் பணியாளர்கள் பாராட்டுகிறார்கள்.

சிரித்துக்கொண்டே சுத்தம் செய்கிறார். அவருக்கு துடைப்பானை சரியாக கையாள முடியாத நிலையில், பணியாளர்கள் சரிசெய்து கொடுக்கிறார்கள், இந்த காட்சிகள் வீடியோவில் வெளியாகி உள்ளது. பாராளுமன்றத்தில் நடந்த இச்சம்பவத்தை டச்சு நாட்டு தூதர் வீடியோவாக வெளியிட்டு உள்ளார். அவருடைய பணியை பாராட்டி பலரும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். பிரதமரின் பணிவு பலரையும் வெகுவாக கவர்ந்து உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்