image courtesy: ANI 
உலக செய்திகள்

அமெரிக்க வர்த்தக பிரிதிநிதி கேத்தரின் தையுடன் ஜெய் சங்கர் நாளை சந்திப்பு..!

அமெரிக்க வர்த்தக பிரிதிநிதி கேத்தரின் தை, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் நாளை சந்தித்து பேச உள்ளனர்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

இந்தியா-அமெரிக்கா இடையே '2 பிளஸ் 2' பேச்சுவார்த்தை இன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடக்கிறது. மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகிய இருவரும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இந்த நிலையில் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரின் தையுடன் நாளை சந்தித்துப் பேச இருக்கிறார்.

தொடர்ந்து கேத்தரின் தை, ஜெர்மனியின் சர்வதேச மற்றும் ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்களுக்கான மாநிலச் செயலர், மற்றும் ஆஸ்திரியாவின் டிஜிட்டல் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரி ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்