உலக செய்திகள்

டொனால்டு டிரம்ப் மகள் இவாங்கா டிரம்புடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

டொனால்டு டிரம்ப் மகள் இவாங்கா டிரம்பை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார்.

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா பொதுச்சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் அங்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவங்கா டிரம்ப்-ஐ சந்தித்து சுஷ்மா பேசினார். பெண்களுக்கான அதிகாரமளித்தல் குறித்து இருவரும் பேசியதாக அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், இவங்கா டிரம்ப் விரைவில் இந்தியா வர உள்ளார், அது குறித்தும் இருவரும் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பூடான் நாட்டின் பிரதமர் ஷெரின் டோப்கே, வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஐக்கிய அமீரக வெளியுறவு மந்திரி ஆகியோரையும் சந்தித்து சில நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்