காபுல்,
ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாகாணத்தின் இந்துகுஷ் மலைத்தொடரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இரவு 10 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் , கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர்.