உலக செய்திகள்

நிலநடுக்கத்தில் ரெண்டாக பிளந்த விமான ஓடுதளம்.. பரபரப்பு காட்சிகள்...!

துருக்கியின் ஹடாய் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் உள்ள ஒரே ஓடுபாதையில் பிரம்மாண்டமாக பிளவு ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

அங்காரா,

துருக்கியின் தென் மத்திய பகுதியில் கடந்த 6-ம் தேதி அதிபயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.8 வரை பதிவான இந்த நிலநடுக்கங்களில் இதுவரை 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் உயிரிழ்ந்துள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தனர். இடிந்து விழுந்த கட்டிடங்களில் இன்னும் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை 210 ஆயிரத்தை எட்டிவிடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், துருக்கியின் ஹடாய் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் உள்ள ஒரே ஓடுபாதையில் பிரம்மாண்டமாக பிளவு ஏற்பட்டுள்ளது. விமான ஓடுபாதை இரண்டாகப் பிளந்து கிடப்பதால் அதனைப் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. இதனால் அந்த விமான நிலையமே இயங்கமால் முடங்கியுள்ளது. மோசமாக பிளவுபட்டிருக்கு விமான ஓடுதளத்தைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்