நௌமியா,
நியூ கலிடோனியாவில் உள்ள நௌமியாவில் இன்று அதிகாலை திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
நௌமியா நகருக்கு கிழக்கே 477 கிமீ தொலைவில் 170 கிமீ ஆழத்தில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.