சிங்கப்பூர்,
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா தீவில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறுகையில்,
இந்த நிலநடுக்கம் சுமார் 6.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. நெயாபு நகரிலிருந்து சுமார் 470 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் தொலைவில் இது உருவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை என தெரிவித்துள்ளனர்.