உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டன.

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் இருந்து வடகிழக்கே 237 கி.மீ. தொலைவில் இன்று காலை 5.33 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது.

இதேபோன்று பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகருக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் இன்று காலை 5.46 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது.

இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும் இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட விளைவுகள் பற்றிய பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...