ஈக்வடார்,
ஈக்வடார் நாட்டில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 40க்கும் மேற்பட்ட கைதிகள் உயிரிழந்தனர். அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சான்டா டொமிங்கா நகரில் உள்ள சிறையில் கைதிகளுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு, கலவரமாகி உள்ளது. இதில், 43 கைதிகள் உயிரிழந்த நிலையில், கலவரத்தில் உயிரிழந்த கைதிகளின் உறவினர்கள் சிறைக்கு வெளியே சோகத்துடன் காத்திருந்தனர்.