உலக செய்திகள்

எகிப்து ராணுவ தாக்குதலில் 12 தீவிரவாதிகள் பலி

எகிப்து ராணுவம் சினாய் தீபகற்ப பகுதியில் நடத்திய தொடர் தீவிரவாத வேட்டையில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

கெய்ரோ,

எகிப்து நாட்டில் மசூதி ஒன்றின் மீது கடந்த வருடம் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 300க்கும் கூடுதலானோர் கொல்லப்பட்டனர். தொடர்ச்சியாக ஐ.எஸ். அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், 3 மாதங்களில் தீவிரவாதிகளை ஒழிக்கும்படி ராணுவத்துக்கு கடந்த நவம்பரில் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், எகிப்து பாதுகாப்பு படையினர் சினாய் தீபகற்ப பகுதியில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தினர். எகிப்து படையினரின் வான்வழி தாக்குதலில் 60 தீவிரவாதிகளின் இருப்பிடங்கள் அழிக்கப்பட்டு உள்ளன.

இந்த தாக்குதலில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். 92 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்