உலக செய்திகள்

முன்னாள் மனைவிக்கு வயது குறைந்த நடிகருடன் நிச்சயதார்த்தம்...! எலான் மஸ்க் பதில் ...!

எலான் மஸ்க் முன்னாள் மனைவி தன்னைவிட வயது குறைந்த நடிகரை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். அவர்களது நிச்சயதார்த்தம் முடிந்தது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

எலான் மஸ்க் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் பரபரப்பு தான்.  என்ன செய்தாலும் பரபரப்புதான். கடந்த ஆண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலர்கள் (ரூ.3.59 லட்சம் கோடி) செலவழித்து டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கினார்.

அதன்பிறகு இந்த டுவிட்டரை தனக்கே உரிய பாணியில் பல மாற்றங்களை செய்து செய்திகளில் இடம்பிடித்தார். மேலும் தற்போது டுவிட்டர் தனது பெயரையும் லோகோவையும் மாற்றி அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இனி டிவிட்டர் X என அழைக்கப்படும். லோகோவும் நீல பறவையிலிருந்து எக்ஸ் சின்னமாக மாறியது.

இந்த விஷயம் ஒருபுறம் இருக்க, இப்போது அவரது முன்னாள் மனைவி தலுலா ரிலேவுக்கு பிரபல நடிகருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

எலான் மஸ்க், தலுலா ரிலே தம்பதி 2016 இல் விவாகரத்து செய்து கொண்டனர்.

தலுலா ரிலே தன்னைவிட 4 வயது இளையவரான 'கேம் ஆப் திரோன்ஸ்' புகழ் தாமஸ் பிராடி சாங்ஸ்டரை மணக்கவுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக தலுலா ரிலே, தாமஸ் பிராடியுடன் டேட்டிங் செய்து வருகிறார். ரிலே தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தனது முன்னாள் மனைவி மற்றொரு திருமணத்திற்கு தயாராகி வருவதை அறிந்த எலான் மஸ்க், சிவப்பு இதயம் கொண்ட எமோஜியுடன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

மறுபுறம், தாமஸ் பிராடி சாங்ஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் மூலம் அவர்களது நிச்சயதார்த்தம் குறித்து தெளிவுப்படுத்தி உள்ளார். ஆனால் அவர்களின் திருமணம் எப்போது என்று தெரியவில்லை.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து