உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு காரணமாக மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம்

கொரோனா பாதிப்பு காரணமாக மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி அப்துல்லா அமீன் தெரிவித்துள்ளார்.

மாலே,

தெற்காசிய சிறிய தீவு நாடான மாலத்தீவில் உள்ள ஒரு சொகுசு விடுதி ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கடந்த 7-ந்தேதி கண்டறியப்பட்டது. இத்தாலி சுற்றுலா பயணி ஒருவர் மூலமாக இந்த வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாலத்தீவில் உள்ள பெரும்பாலான சொகுசு விடுதிகள் மூடப்பட்டன.

அங்கு இதுவரை 8 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டுள்ளது.

இந்தநிலையில் மாலத்தீவில் 30 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி அப்துல்லா அமீன் தெரிவித்துள்ளார்.

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்