கோப்புப்படம் 
உலக செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா சான்றிதழ் பயன்பாடு நீட்டிப்பு

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா சான்றிதழ் பயன்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பிரசல்ஸ்,

ஐரோப்பிய நாடுகளில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக்கொண்டு விட்டார் அல்லது அவருக்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் 'நெகட்டிவ்' முடிவு வந்துள்ளது அல்லது கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டுவிட்டார் என்று காட்டுகிற வகையில் கொரோனா சான்றிதழ் வழங்கி அது பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள 27 நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு இந்த கொரோனா சான்றிதழ்கள் வழங்குகின்றன.

இது ஐரோப்பிய கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு இடையே பயணம் மேற்கொள்வதற்கு அவசியமாகிறது.

தற்போது ஐரோப்பிய நாடுகளில் கோடை விடுமுறை தொடங்க உள்ள நிலையில், தொற்று மீண்டும் எழுச்சி பெறத்தொடங்கி உள்ளது. இந்த நிலையில்தான் கொரோனா சான்றிதழின் பயன்பாடு மேலும் ஓராண்டுக்கு, அடுத்த ஆண்டு ஜூன் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் இதுவரையில் 200 கோடி கொரோனா சான்றிதழ்கள் வழங்கி உள்ளன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து