உலக செய்திகள்

ஐரோப்பிய சுற்றுப்பயணம்; பிரசல்ஸ் நகருக்கு சென்றடைந்தார் ராகுல் காந்தி

ராகுல் காந்தி இன்று பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் நகருக்கு சென்றடைந்துள்ளார்.

தினத்தந்தி

பிரசல்ஸ்,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 5 நாட்கள் பயணமாக ஐரோப்பாவுக்கு சென்றுள்ளார். அவரது இந்த வெளிநாட்டுப் பயணம் இந்திய அயலக காங்கிரஸ்(ஐ.ஓ.சி.) மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி இன்று பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் நகருக்கு சென்றடைந்துள்ளார். அங்கு 7-ந் தேதி ஐரோப்பிய ஆணைய எம்.பி.க்களை சந்தித்து பேசுகிறார்.

இதையடுத்து நாளை(8-ந் தேதி) பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்கிறார். அங்கு ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசுகிறார். தொடர்ந்து 9-ந் தேதி, பாரீஸ் நகரில் நடக்கும் பிரான்ஸ் தொழிலாளர் சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர், நார்வே நாட்டின் ஆஸ்லோ நகருக்கு ராகுல்காந்தி செல்கிறார்.

அங்கு 10-ந் தேதி, இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்திய வம்சாவளி பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார். பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த ஆண்டு ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10-ந் தேதிகளில் ஜி-20 மாநாடு நடக்கும் நேரத்தில், ராகுல்காந்தி ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sri Rahul Gandhi has landed in Brussels as a part of his reach out program to Indian Diaspora in European countries,IOC is coordinating this program to ensure maximum participation!
Dr
@sampitroda also will be participating in all these events happening at different EU countries pic.twitter.com/llxnBFPrAF

Indian Overseas Congress (@INCOverseas) September 7, 2023 ">Also Read:

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்