உலக செய்திகள்

உக்ரைனுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்க ஐரோப்பிய யூனியன் முடிவு

உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகள் போர் தளவாடங்கள், போர்க்கப்பல்களை கிழக்கு ஐரோப்போ நோக்கி அனுப்பி வைத்துள்ளன.

தினத்தந்தி

பிரஸ்சல்ஸ்,

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளின் எல்லையில் உள்ள கிரிமியா என்ற நகரத்தை ரஷ்யா கடந்த 2014-ம் ஆண்டு சண்டையிட்டு தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதில் இருந்து ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை குவித்து வருகிறது. எந்த நேரத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகள் போர் தளவாடங்கள், போர்க்கப்பல்களை கிழக்கு ஐரோப்போ நோக்கி அனுப்பி வைத்துள்ளன.

இந்த நிலையில் உக்ரைனுக்கு 1.2 பில்லியன் யூரோ (இந்திய பண மதிப்பில் சுமார் 10,138.80 கோடி ரூபாய்) நிதியுதவி வழங்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய யூனியன் கமிஷன் புதிய அவசர கால நிதியாக இதை வழங்க பரிந்துரை செய்துள்ளது. இந்தத் தகவலை ஐரோப்பிய யூனியன் கமிஷன் தலைவர் உர்சுலா வொன் டெர் லியென் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு ரஷியா கிரிமியாவை தன்னுடன் இணைத்தபோது, உக்ரைனுக்கு 17 பில்லியன் யூரோ அளவில் ஐரோப்பிய யூனியன் கடன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்