Image Courtesy: AFP 
உலக செய்திகள்

உக்ரைன் பெண்களை கற்பழித்து கொன்ற ரஷிய வீரர்கள்: பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

புச்சா நகரில் உக்ரைன் பெண்களை ரஷிய வீரர்கள் கற்பழித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

கீவ்,

உக்ரைனின் புச்சா, இர்பின் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ரஷிய படைகள் சமீபத்தில் வெளியேறிய பின்பு அங்கு ஆய்வு நடத்தியபோது அப்பாவி மக்கள் பலரை ரஷிய வீரர்கள் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.

தெருக்களில் இருந்து கொத்து கொத்தாக பிணங்கள் மீட்கப்பட்டன. அந்த உடல்களுக்கு தற்போது பிரேத பரிசோதனை நடந்து வருகிறது. இதில் ரஷிய வீரர்கள் போட்ட வெறியாட்டங்கள் அம்பலமாகி வருகிறது.

அந்தவகையில் பெண்களை கொலை செய்வதற்கு முன்பு, கொடூரமாக கற்பழித்து இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தடயவியல் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

பல உடல்களை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்து இருக்கின்றனர். சிலரின் தலையை துண்டித்து உள்ளனர். முகங்கள் சிதைக்கப்பட்டதால் பல உடல்கள் அடையாளம் காண முடியாமல் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக தி கார்டியன் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த இந்த நகரங்களை சேர்ந்த பெண்கள், ரஷிய வீரர்களின் பிடியில் இருந்தபோது தாங்கள் சொல்லொணா துயரை அனுபவித்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது