பிரேசிலியா,
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. அங்கு கொரோனா தொற்று எவ்வித சரிவும் இன்று வீரியமாக தொடர்ந்து பரவுகிறது. அங்கு கடைசியாக கணக்கிட்ட 24 மணி நேரத்தில் 80,529 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு 1 கோடியே 37 லட்சத்து 58 ஆயிரத்து 093 ஆக அதிகரித்து இருக்கிறது.
இதைப்போல மேற்படி 24 மணி நேரத்தில் 3,774 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கை 3.65 லட்சத்தை கடந்து விட்டது. பலி எண்ணிக்கையில் பிரேசில் நாடு தொடர்ந்து 2-வது இடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.