உலக செய்திகள்

இந்திய பயணிகள் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு செல்வதற்கான தடை நீட்டிப்பு

இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் பயணிகள், பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு செல்வதற்கான தடை ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மனிலா,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக மிக அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டன. இதன் காரணமாக இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்தன. தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்தன.

இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கொரோனா தொற்றின் 2வது அலை பரவல் காரணமாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்குள்ளாக பயணம் மேற்கொண்ட இதர நாட்டு பயணிகளும் பிலிப்பின்ஸ் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த தடையை பிலிப்பைன்ஸ் அரசு 3வது முறையாக நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு