உலக செய்திகள்

இந்தியாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துகிறது பேஸ்புக்!

இந்தியாவில் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் பாதுகாப்பு அம்சங்களை பேஸ்புக் மேம்படுத்துகிறது என மார்க் ஜூக்கர்பெர்க் கூறிஉள்ளார். #CambridgeAnalytica #Facebook #India #Zuckerberg

தினத்தந்தி

வாஷிங்டன்,

இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் தேர்தல்களில் நேர்மைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் பேஸ்புக் தளத்தில் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்படுகிறது என்று கூறிஉள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க்.

பேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய விவரங்கள் ஒரு ஆப் மூலம் திருடப்பட்டு, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியது. அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிக்காக பணியாற்றிய கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா மோசடி செயலில் ஈடுபட்டதாக தெரியவந்து உள்ளது. இதுபோன்று பிற முக்கிய தேர்தல்களிலும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா தன்னுடைய கைவரிசையை காட்டி உள்ளது எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவை தன்னுடைய தளத்தில் இருந்து பேஸ்புக் நீக்கிவிட்டது.

இந்தியர்களின் தகவல்கள் விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனம் சமரசம் செய்துக் கொண்டது என்பது தெரியவந்தால், கடுமையான நடவடிக்கையை எடுக்கப்படும், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு சம்மன் விடுப்போம், என இந்தியா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்

இந்நிலையில் இந்தியாவில் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் பாதுகாப்பு அம்சங்களை பேஸ்புக் மேம்படுத்துகிறது என மார்க் ஜூக்கர்பெர்க் கூறிஉள்ளார்.

தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்து பேசிய பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், செய்திகளை கண்ட்ரோல் செய்யவும், தேர்தல்களில் செல்வாக்கை முன்நிறுத்த செய்யவும் முயற்சிக்கும் கணக்குகளை கண்டுபிடிக்க பேஸ்புக் செயற்கை நுண்ணறிவு Artificial Intelligence (AI) செயலிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து உள்ளது. இதுபோன்றதொரு செயலில் கடந்த 2017-ம் ஆண்டு பிரேசில் தேர்தலின்போது பயன்படுத்தப்பட்டது. அமெரிக்க தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் வகையிலான தந்திரோபாயங்களை பயன்படுத்த முயன்ற ரஷிய தரவுகளுடன் தொடர்புடைது என நம்பப்படும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி கணக்குகள் அடையாளம் காணப்பட்டது. அதற்கு பின்னதாக நாங்கள் செயற்கை நுண்ணறிவு செயலிகளை உருவாக்க தொடங்கிவிட்டோம்.

போலி கணக்குகளை எங்களால் முடக்கவும் முடியும், தடுக்கவும் முடியும். கடந்த 2017-ம் ஆண்டு அலபாமாவில் சிறப்பு தேர்தல் நடைபெற்றது. அப்போது போலி கணக்குகள் மற்றும் போலி செய்திகளை அடையாளம் காண நாங்கள் புதிய ஏஐ செயலிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தோம். அப்போது போலியான செய்திகளை பரப்ப முயற்சி செய்த மாக்கடோனியக் கணக்குகளை நாங்கள் கண்டுபிடித்தோம், அவைகளை எங்களால் நீக்கவும் முடிந்தது என்றார்.

உலக அரங்கில் பேஸ்புக் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கிய நிலையில் முதல் முறையாக வெளிப்படையாக மார்க் ஜூக்கர்பெர்க் தன்னுடைய கருத்தை பதிவு செய்து உள்ளார்.

இப்போது சிஸ்டம்ஸ் பற்றி அதிகம் தெரிந்துக் கொண்டு உள்ளே என உணர்கிறேன். அதே வேளையில் ரஷியா மற்றும் பிற அரசுக்கள் அவர்களுடைய பணியில் அதிநவீனத்தை கொண்டிடுக்க முன்நோக்கி செல்கிறார்கள் என நினைக்கிறேன். எனவே எங்களுடைய தரப்பிலும் பாதுகாப்பு அம்சங்களில் மேம்பாடு அவசியமானது. 2018-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற இருக்கும் தேர்தலுக்கு மட்டும் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது கிடையாது, இந்திய மற்றும் பிரேசில் தேர்தல்களிலும் அதற்கு பின்னர் நடைபெறும் முக்கிய தேர்தல்களிலும் எங்களுடைய கவனம் இருக்கும், என கூறிஉள்ளார்.

தேர்தல்களில் போலி கணக்குகளை கொண்டு செல்வாக்கை முன்நிறுத்த முயற்சி செய்யப்படுவதை தடுக்க பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் பணியை பேஸ்புக் தொடங்கி செயல்படுத்தி வருகிறது எனவும் குறிப்பிட்டார் மார்க் ஜூக்கர்பெர்க்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை