சான்பிரான்சிஸ்கோ
அதாவது ஃபேஸ்புக்கில் டிரம்ப் ஆதரவு பிரச்சாரங்கள் தவிர்த்து வெளியில் நிகழும் நிகழ்ச்சிகளுக்கு விளம்பரங்கள் கூட வெளியிடப்பட்டதாகவு, அப்படியொரு நிகழ்ச்சி குடியேற்ற மக்களுக்கு எதிரானதாக இருந்ததாகவும், அதில் கல்ந்து கொண்டவர்கள் பின்னர் கமெண்டுகளை பதிவிட்டதாகவும் இப்போது தெரிய வந்துள்ளது. கூகுள் செர்ச் மூலம் இத்தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.
ஃபேஸ்புக் சென்ற வாரம் செனட் விசாரணையின் போது இத்தகவல்களை கூறாமல் இப்போது கூறுவது பற்றி அதிருப்தி தெரிவித்தார் செனட்டர் மார்க் வார்னர். இதனிடையே ஒரு சில தேர்தல் நன்னடைத்தையை வலியுறுத்தும் அமைப்புகள் ஃபேஸ்புக் தலைவர் மார்க் ஸூக்கர்பெர்க்கிற்கு கடிதம் எழுதி இவ்விஷயத்தில் அதனிடமுள்ள தகவல்களை வெளியிடும்படி கோருகின்றன. அவ்வாறு வெளியிடுவதன் மூலம் ரஷ்யர்கள் எவ்வளவு தூரம் தங்களது ஜனநாயக செயல்பாடுகளில் தலையிட்டுள்ளனர் என்பது தெரியவரும் என்கின்றனர்.