மொசூல்,
போர்க்களத்தில் தோல்வியை தழுவி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்காத்துக் கொள்ளும் வகையில் நேற்று ஆற்றுக்குள் விழுந்து உள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழித்தொழிக்கும் போரில் ஈடுபட்டு உள்ள அமெரிக்க பயிற்சிபெற்ற ஈராக்கிய படை டைகரிஸ் நதியை எட்டிஉள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிக்கும் பணியானது 8 மாதங்களை எட்டிஉள்ளது, போரில் ஈராக்கின் பழமைவாய்ந்த நகரமானது சின்னாப்பின்னமாகி உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து உள்ளனர். மில்லியன் கணக்காண மக்கள் இருக்க இடமின்றி தப்பி ஓடி அகதிகளாகி உள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஈராக் ராணுவத்தின் அதிரடி தாக்குதலில் தோல்வியை தழுவி உள்ள பயங்கரவாதிகள் டைகரிஸ் நதி பகுதிக்கு ஓரங்கட்டப்பட்டு உள்ளனர்.
நேற்று நகரில் வானை நோக்கி புகைமூட்டம் செல்லும் காட்சியானது காணப்பட்டது. உயிரிழந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சடலமானது தெருக்களில் கிடைக்கும் காட்சிகளும் காணப்படுகிறது. அப்பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிலைக்கொண்டிருந்த இடங்களை குறிவைத்து வான்வழி தாக்குதலும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஈராக் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் யக்யா ராசூல் பேசுகையில்,
டைகரிஸ் நதியில் விழுந்து தப்பி செல்ல முயற்சித்த 30 பயங்கரவாதிகளை ஞாயிறு காலை ராணுவம் சுட்டுக் கொன்றது என்றார்.
மிகவும் பழமையான மொசூல் நகரில் டைகரிஸ் நதியின் கரையில் ஈராக்கிய படைகள் அந்நாட்டு தேசிய கொடியை ஏற்றியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. கடந்த சனிக்கிழமை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் சாகும் வரையில் போராடுவோம் என கூறியிருந்தது. பாதுகாப்பு படையினர் நாலாபுறமும் வான்வழிதாக்குதல், தரைவழித் தாக்குதல்களை முன்னெடுத்து பயங்கரவாதிகளை நிலைகுலைய செய்தார்கள். பயங்கரவாதிகள் பெண்களை தற்கொலை பயங்கரவாதிகளாக்கி தாக்குதலை நடத்தி உள்ளனர். இதனால் பலர் காயம் அடைந்து உள்ளனர்.
ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் உலக நாடுகள் படைகளுக்கு அமெரிக்கா தலைமை தாங்கி நடத்தி வருகிறது.