வாஷிங்டன்
அமெரிக்க அதிபர் டிரம்பை சுற்றி அடிக்கடி பல்வேறு சர்ச்சை கருத்துகள் எழும். அந்த வகையில் அவர் தன்னை காதலித்ததாக முன்னாள் ஆபாச பட நடிகை ஒருவர் கூறியுள்ளார். ஸ்டார்மி டேனியல்ஸ், செய்தி நிறுவனத்திற்கு ஒன்று பேட்டி அளித்த அவர் கடந்த 2006 ம் ஆண்டு டிரம்ப்புடன் உடல் ரீதியான உறவு இருந்ததாக கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடன் காதலில் இருந்ததாகவும் இருவரும் பலமுறை உறவு வைத்துள்ளதாகவும் பிரபல ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் கூறியிருந்தார்.
ஜனாதிபதி மீதான இந்த குற்றச்சாட்டிற்கு வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்திருந்தாலும், இது குறித்து பேசுவதை ஸ்டார்மி நிறுத்தவில்லை.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பாக 2016 ஆம் ஆண்டு இதை பற்றி பேசாமல் இருக்க ஒரு லட்சத்து 30,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டதாக நடிகை தெரிவித்திருந்தார். ஆபாசப் பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்சுக்கு டிரம்பின் வழக்கறிஞர் பணம் வழங்கியதாக கூறபட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏன் உங்கள் வழக்கறிஞர் பணம் கொடுத்தார் என்று கேட்டதற்கு அதற்கு நீங்கள் அவரைதான் கேட்க வேண்டும் என டிரம்ப் கூறினார்.
இந்த நிலையில் டிரம்பின் வழக்கறிஞர் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டதாக செய்தி வெளியானது. ஆபாச பட நடிகைக்கு பணம் அளித்தது தொடர்பான ஆவணங்கள் இந்த சோதனையில் சிக்கி உள்ளன என்கின்றன அமெரிக்க ஊடகங்கள். இது தொடர்பான வங்கி ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது.
இந்த சோதனை குறித்து வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களிடம் பேசிய டிரம்ப், "இந்த சூனிய வேட்டை தொடர்ந்து நடக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது வழக்கறிஞர் அலுவலகத்தில் நடந்த எப்.பி.ஐ சோதனையானது அவமானகரமான செயல் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார்.