உலக செய்திகள்

கிரீஸ்: 288 பேருடன் சென்ற உல்லாச கப்பலில் திடீர் தீ விபத்து..!

கிரீஸிலிருந்து 288 பேருடன் சென்ற யூரோபெரி ஒலிம்பியா என்ற உல்லாச கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தினத்தந்தி

ஏதேன்ஸ்,

கிரீஸிலிருந்து மத்தியதரைக் கடலின் அயோனியன் கடல் வழியாக யூரோபெரி ஒலிம்பியா என்ற உல்லாச கப்பல் இத்தாலி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலில் 237 பயணிகள் மற்றும் 51 பயணிகள் என மொத்தம் 288 பேர் இருந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கிரீஸூக்கும் அல்பேனியாவுக்கும் இடையே உள்ள கோர்பு தீவுக்கு அருகில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விபத்து நடந்த பகுதிக்கு சென்ற மீட்பு படையினர் கப்பலில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டு அருகில் இருந்த கோர்பு தீவில் கொண்டு சேர்த்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்